சேமி
  • புதிய பட்டியல்
மேலும்
    சேமி
    • புதிய பட்டியல்
4726/ரபி/1446 , 29/செப்டம்பர்/2024

முதல் மாதங்களிலேயே கருவைக் கலைப்பதன் சட்டம்.

கேள்வி: 42321

முதல் மாதங்களிலேயே (1-3) ரூஹ் ஊதப்படுவதற்கு முன் கருவைக் கலைப்பதன் சட்டம் என்ன?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

மூதறிஞர் சபையின் அமர்வு கீழ்வருமாறு தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது.

1.            மார்க்க ரீதியான நியாயங்களுக்காக, அல்லது மிக மிக நெருக்கடியான சூழ்நிலையில் தவிர கருவை அதன் பல்வேறு கட்டங்களில் எதிலும் கலைப்பது கூடாது.

2.            மார்க்க ரீதியான நலன் அல்லது ஏதாவது அசம்பாவிதங்களை தவிர்த்தல் போன்ற நியாயங்கள் இருந்தால் மாத்திரம், கரு முதலாவது கட்டமான 40 நாட்கள் கால எல்லையில் இருந்தால் அதை கலைப்பதில் குற்றமில்லை. ஆனால் பிள்ளை வளர்ப்பு பற்றிய அச்சம் அல்லது வாழ்க்கைச் செலவு, கல்வி மற்றும் அவர்களது எதிர்காலம் பற்றிய பயம் அல்லது இருக்கும் பிள்ளைகள் போதுமானது என்ற மனோநிலை காரணமாக கருவைக் கலைப்பது அனுமதிக்கப்பட்டதல்ல.

3.            நம்பகமான வைத்திய அறிக்கை 'தாயின் வயிற்றில் சிசு அவ்வாறே நீடிப்பது தாயின் நலத்திற்கு ஆபத்தானது, மரணத்தை ஏற்படுத்தும்" என்று கூறுமாயின் அட்டை போன்று ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் அல்லது சதைப் பிண்டமாக இருக்கும் நிலையிலும் (இரண்டாவது, மூன்றாவது நாட்பது நாட்கள்) அந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கு முடியுமான அனைத்து வழிகளிலும் முயற்சித்த பின் கருவைக் கலைக்கலாம்.

4.            மூன்றாவது கட்டத்தின் பின் நான்கு மாதங்கள் நிறைவடைந்த பின் நம்பகமான நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள் 'சிசு தாயின் வயிற்றில் இருப்பது தாயின் மரணத்திற்கு காரணமாகும்" என்று பரிந்துரை செய்தால் மாத்திரம் கருவைக் கலைக்கலாம். அதுவும் சிசுவின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முடியுமான அனைத்து வழிவகைகளையும் கையாண்டதன் பின்னால் அவ்வாறு செய்யலாம். இந்த நிபந்தனைகளுடன் கருவைக் கலைக்க அனுமதிக்கப்படுவது, 'இரு தீங்குகளில் பெரிய தீங்கை தவிர்ப்பதற்கும், இரு நலவுகளில் பெரிய நலவை பெறுவதற்கும்" ஆகும்.

மூலநூட்கள்

மூலம்

அல்பதாவா அல் ஜாமிஆ (3/1056)

எழுத்து வடிவமைப்பு விருப்பங்கள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android