சேமி
  • புதிய பட்டியல்
மேலும்
    சேமி
    • புதிய பட்டியல்
308/முகர்ரம்/1446 , 14/ஜூலை/2024

வட்டி வங்கிகளில் பணம் வைப்பிலிடல்

கேள்வி: 22392

வைப்புச்செய்யப்பட்ட பணத்திற்கான வட்டியைப் பெற்றுக்கொள்ள மறுத்து, பணப் பரிமாற்றம் செய்யும் நோக்கில் மாத்திரம் வட்டி வங்கிகளில் பணத்தை வைப்பிலிடலாமா?  ஆனால் கட்டாயம் வங்கி நான் எடுக்க மறுத்த வட்டித்தொகையை தனக்கு எடுத்துக் கொள்ளும்.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

அல்ஹம்துலில்லாஹ்.

வட்டி வங்கிகளில் பணம் வைப்பிலிடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

ஒரு முஸ்லிம் நிர்ப்பந்த நிலையின் போது மாத்திரமே அங்கு செல்லலாம்.

ஆனாலும், பின்வரும் மூன்று நிபந்தனைகள்  கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

அவை :

01-

இதற்கான தேவை காணப்படல் வேண்டும்.

அதாவது, பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வட்டி வங்கிகளை தவிர வேறெந்த இடங்களும் அங்கு இல்லாதிருத்தல். அவ்வாறான வேறு இடங்கள்  இருப்பின் வட்டி வங்கிகளில் பணம் வைப்புச் செய்ய முடியாது.

02 -

வங்கியானது நூறு வீதம் வட்டியை அடிப்படைக்கொண்டு மாத்திரமே நடாத்தப்படும் நிலையில் இருக்கக் கூடாது.

அவ்வாறான நிலை இருக்குமானால், அங்கு எந்த வகையிலும் பணம் வைப்பிலிட அனுமதி கிடையாது.

இந்த நிலையில், அங்கு பணம் வைப்பிலிடுவது வட்டி எனும் பாவச்செயலுக்கு உதவுவதாகவே அமையும்.

இவ்வாறு வட்டிக்கு  உதவி செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை.

03-

வைப்பிலிடுபவர் தனது பணத்திற்கான இலாபத் தொகையினை வங்கியிடமிருந்து பெறக்கூடாது.

அவ்வாறு பெறுவது வட்டியாக மாறிவிடும்.

வட்டியானது குர்ஆன், ஸுன்னா, இஜ்மா போன்ற அனைத்து மூலாதாரங்கள் மூலமாகவும் ஹராமென நிரூபிக்கப்பட்ட பாவமாகும்.

வைப்புச்செய்யப்பட்ட பணத்திற்கான இலாபத் தொகையை வைப்பிலிட்டவர் பெறாத போது, அதை வங்கி எடுத்துக்கொள்கிறது

என்று கேள்வி கேட்கும் வாசகர்

இங்கு குறிப்பிடும் கருத்தினைப் பொறுத்தவரையில், அது உண்மையில் இலாபமல்ல. அது ஹராமான வட்டிப்பணமாகும். அடிப்படையில் அது வங்கிக்கே உரியதாகும். அவற்றில் எதையும் வைப்பிலிட்டவர் பெறுவதற்கு உரித்துடையவர் அல்ல. ஏனெனில் வட்டியை விட்டுவிடுமாறுதான் கட்டளை பிறப்பித்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான் :

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். (அல் பகறா :278)

மேலும், பின்வரும் வசனத்தில் வட்டி எடுப்பவர்களை அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கை செய்கிறான்.

فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ۚ

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)  (அல் பகறா : 279)

பணத்தை வங்கியில் வைப்புச் செய்யும் இன்றைய நடைமுறையானது இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற அடகுவைக்கும் முறைமைக்கு ஒப்பானதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட "அடகு முறை" என்பது நீங்கள் உங்களது பணத்தை அல்லது சொத்தை ஓரிடத்தில் ஒப்படைப்பது. அது அங்கு அப்படியே யாராலும் கையாளப்படாத நிலையில் இருக்கும்.

ஆனால், வங்கியில் நடப்பது யாதெனில், அங்கு பணத்தை அல்லது சொத்தை கொடுத்து அதை கையாள்வதற்கான அனுமதியும் வழங்கப்படுகிறது. இது இஸ்லாத்தின் பார்வையில் கடனாக நோக்கப்படுமே தவிர அடகுவைத்ததாக அல்ல.

இதனை சட்டத்துறை அறிஞர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள் : அடகுவைப்பவர் தனது சொத்தை கையாள்வதற்கான அனுமதியுடன் வழங்கினால், அது கடனாகவே நோக்கப்படும். (அதனை திரும்பிப் பெறும் போது மேலதிகமாக ஏதாவது பெறப்படுமாக இருந்தால் அது வட்டியாக மாறிவிடும்.)  

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

( பார்க்க : மனாருல் இஸ்லாம் பத்வா  இலக்கம் 440-2/433 - ஷெய்க் உதைமீன் )

மூலநூட்கள்

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

எழுத்து வடிவமைப்பு விருப்பங்கள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android