சேமி
  • புதிய பட்டியல்
மேலும்
    சேமி
    • புதிய பட்டியல்
317/ரபி/1446 , 20/செப்டம்பர்/2024

அகீகாவின் சட்டங்கள் என்ன? ஏழை அகீகா கொடுக்கத் தேவையில்லையா?

கேள்வி: 20018

அல்லாஹ் எனக்கு ஒரு குழந்தையை தந்திருக்கிறான். அதற்காக இரண்டு ஆடுகளை அறுத்து அகீகா கொடுப்பது எனது கணவர் மீது கடமை என்று செவியுற்றேன். அவர் மீது கடன் சுமை உள்ள காரணத்தால் அவரது நிலை இதற்கு இடம் கொடுக்காதிருந்தால் இக்கடமை அவரை விட்டும் நீங்குமா?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

முதலாவதாக :

               அகீகாவின் சட்டத்தில் உலமாக்கள் மூன்று கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

01.         அவர்களில் சிலர் : வாஜிப் என்கின்றனர்.

02.         இன்னும் சிலர்    : முஸ்தஹப் என்கின்றனர்.

03.         வேறு சிலர்       : வலியுறுத்தப்பட்ட ஸுன்னா என்கின்றனர். இதுதான் சரியான கருத்துமாகும்.

லஜ்னதுத் தாஇமா (ஸஊதி மூதறிஞர் சபை) வின் கருத்தப்படி| இது ஸுன்னா முஅக்கதாவாகும் (வலியுறுத்தப்பட்ட ஸுன்னா). ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாக இருந்தால் ஒரு ஆடும் அறுக்க வேண்டும். இது ஏழாவது நாள் நிறைவேற்றப்படும். ஏழாவது நாள் தாண்டிவிட்டால் வேறு நாட்களிலும் அறுப்பது ஆகுமாகும். தாமதப்படுத்திய குற்றம் இல்லை. ஆனால் முடிந்தவரை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றிக்கொள்வது சிறப்பானது.     (லஜ்னதுத் தாஇமா மார்க்கத் தீர்ப்புக்கள்: 11/ 439)

ஆனால்| ஏழைகளுக்கு இது கடமையாகாது என்பதில் யாரும் கருத்துவேறுபாடு கொள்ளவில்லை. அப்படியிருக்கும்போது கடனாளிக்கு ஒரு போதும் கடமையாகாதல்லவா! கடனிருக்கும்போது ஹஜ் செய்ய முடியாது என்பது போல்| அகீகாவை விட முக்கியத்துவம் கொண்ட ஒன்று இருக்கும்போது அகீகா கொடுக்க முடியாது என்பதுவும் இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும்.

எனவே உமது கணவனின் பொருளாதார நெருக்கடி காரணமாக| நீங்கள் அகீகா கொடுக்க வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வரலாம்.

லஜ்னதுத் தாஇமாவிடம் (ஸஊதி மூதறிஞர் சபை) பின்வருமாறு கேட்கப்பட்டது: 'அல்லாஹ் எனக்கு குழந்தைகளை வழங்கியிருந்தும்| பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்களில் யாருக்கும் நான் அகீகா கிரியையை நிறைவேற்றவில்லை. ஏனெனில் நான் ஒரு தொழில் ஊழியன், எனது மாத சம்பளம் குறிப்பிட்ட அளவு நிர்ணயிக்கப்பட்டது. குடும்ப செலவுக்கு மட்டுமே அது போதுமானதாகும். எனவே நான் அகீகா கொடுப்பதன் சட்டம் என்ன?" 

பதில் : 'நீங்கள் குறிப்பிட்டது போன்று பொருளாதார இறுக்கம் இருந்தால், உங்களுக்கும் உங்களது குடும்பத்துக்குமான செலவீனங்களைத் தவிர வேறு விடயங்களுக்கு உங்களது வருமானம் இடம்கொடுக்கவில்லையாயின் அகீகா கொடுக்காமலிருப்பதில் உங்கள் மீது குற்றமில்லை.

ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: 'எந்தவொரு ஆத்மாவுக்கும் அதன் சக்திக்கு மேற்பட்டு அல்லாஹ் சுமை ஏற்றுவதில்லை." (அல்பகரா: 286). பிறிதொரு இடத்தில் கூறும்போது: 'இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை." (அல் ஹஜ்: 78). மேலும்: 'உங்களால் முடிந்த மட்டும் அல்லாஹ்வை பயந்து நடந்துகொள்ளுங்கள்". (தஙாபுன் : 16).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நான் உங்களுக்கு ஏதாவதொரு கட்டளையை பிறப்பித்தால் உங்களால் முடிந்தவரை அதை எடுத்து நடவுங்கள், ஏதாவதொன்றை விட்டும் உங்களைத் தடுத்தால் அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்".

எப்போது உங்களது நிலமை சீராகி இலகுவாக்கப்படுகிறதோ அப்போது அகீகா கொடுப்பது உங்களுக்கு மார்க்கமாகும். (லஜ்னதுத் தாஇமா மார்க்கத் தீர்ப்புகள்: 11/436- 437)

மேலும் ஒரு மார்க்கத் தீர்ப்பு பின்வருமாறு கேட்கப்படுகிறது: 'ஒரு மனிதனுக்கு குழந்தைகள் கிடைக்கின்றன. அவர் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவரால் அகீகாவை நிறைவேற்ற முடியவில்லை. சில வருடங்களுக்குப் பின்னர் அல்லாஹ் அவருக்கு செல்வத்தைக் கொடுக்கிறான். இப்போது அவர் அகீகாவை நிறைவேற்ற வேண்டுமா?

பதில்: நிலமை அவ்வாறிருந்தால் ஒரு ஆண் பிள்ளைக்கு இரண்டு ஆடுகள் வீதம் அகீகாவை நிறைவேற்றுவது அவருக்கு மார்க்கமாகும்." (லஜ்னதுத் தாஇமா மார்க்கத் தீர்ப்புகள்: 11/441- 442)

ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்களிடம் பின்வருமாறு கேட்கப்படுகிறது: 'ஒரு மனிதருக்கு ஆண், பெண்களாக ஒரு தொகைப் பிள்ளைகள் இருக்கின்றனர், அறியாமை அல்லது பொடுபோக்கு காரணமாக அவர்களில் யாருக்கும் அவர் அகீகா கொடுக்கவில்லை. அவர்களில் சிலர் இப்போது வளர்ந்துவிட்டனர். இப்போது அவர் செய்ய வேண்டியது என்ன?

பதில்: அவர் அறியாமை காரணமாக அகீகா கொடுக்காதிருந்தால் இப்போது அதை நிறைவேற்றுவது நல்லது. அல்லது பிற்படுத்தி நாளை செய்கிறேன் என்று கூறுவார். அகீகா கொடுக்க வேண்டிய காலத்தில் அவர் ஏழையாக இருந்திருந்தால் அவர் மீது எதுவும் கடமையில்லை." (லிகாஉல் பாபில் மப்தூஹ்: 2/17- 18)

அதேபோன்று| அவரின் சார்பாக அவரது குடும்பத்தினர் அதை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவ்வாறு நிறைவேற்றுவது ஆகுமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தனதிரு பேரர்களான ஹஸன், ஹுஸைன் (ரழி) அவர்களுக்காக அகீகா கொடுத்ததாக அபூதாவுத்: 2841, நஸாஈ: 4219 கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. ஷெய்க் அல்பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் அபூதாவுதில்: 2466 இதை 'ஸஹீஹ்" என்ற தரத்தில் பதிவு செய்துள்ளார்.

இரண்டாவதாக:

ஹஜ்ஜை நிறைவேற்றுவதா அகீகாவைக் கொடுப்பதா? என்று| இரண்டும் ஒரே நேரத்தில் எதை முற்படுத்துவது என்ற நிலையில் வந்தால் ஹஜ்ஜைத்தான் முற்படுத்தியாக வேண்டும். உங்களது பிள்ளைகளுக்காக அகீகா கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் வளர்ந்த பின்னரும் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆனால் அழைக்கும் போது அகீகாவின் பெயரைக் குறிப்பிட்டு அழைக்க வேண்டியதில்லை. அதே வேளை யாரும் உங்களை பரிகாசம் செய்யவும் முடியாது. ஏனெனில் நீங்கள் சரியைத்தான் செய்கிறீர்கள்.

               அகீகாவை சமைத்துத்தான் கொடுக்க வேண்டும், சாப்பாட்டுக்கு மக்களை அழைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளில்லை. மாறாக பச்சையாக இறைச்சியை பங்கிட்டால் போதுமானது.

லஜ்னதுத் தாஇமா (ஸஊதி மூதறிஞர் சபை) பின்வருமாறு கூறுகிறது: 'அகீகா என்பது| குழந்தை பிறந்து ஏழாவது நாள், அல்லாஹ் அளித்த ஆண் அல்லது பெண் குழந்தைச் செல்வத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறுக்கப்படுவதாகும். இது ஒரு ஸுன்னத்தான கிரியையாகும். அதற்கு ஆதாரமாக நபிமொழிகள் உள்ளன.

தனது குழந்தைக்காக அகீகா அறுப்பவர் தனது வீட்டில் சாப்பாட்டுக்கு வருமாறு மக்களை அழைக்கலாம். அதே போல் ஏழைகள் குடும்பத்தார், அண்டை அயலவர்கள் மற்றும் நண்பர்களுக்கு சமைத்ததாகவோ பச்சையாகவோ இறைச்சியை பங்கிடவும் முடியும். (லஜ்னதுத் தா/மா மார்க்கத் தீர்ப்புகள்: 11/ 442)

அல்லாஹ{ அ/லம் - அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

எழுத்து வடிவமைப்பு விருப்பங்கள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android