சேமி
  • புதிய பட்டியல்
மேலும்
    சேமி
    • புதிய பட்டியல்
215/முகர்ரம்/1446 , 21/ஜூலை/2024

"ஹதீஸ் ஸஹீஹ்"என்பதற்கும் "ஸனத் ஸஹீஹ்" என்பதற்குமிடையிலான வேறுபாடு

கேள்வி: 122507

ஹதீஸ் ஸஹீஹ் என்பதற்கும் ஸனத் ஸஹீஹ் என்பதற்குமிடையிலான வேறுபாடு என்ன?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

 முதலாவது :

பின்வரும் ஐந்து நிபந்தனைகளை உள்ளடக்கிய நிலையில் நபியவர்களுடன் தொடர்புடையதாகச்  கருதப்படும் செய்திகளையே ஸஹீஹான ஹதீஸ் என்ற சொற்பிரயோகம் குறிக்கிறது என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

01-

ஹதீஸ் அறிவிப்பாளர்கள் அனைவரும் "அத்ல்"எனும் சொற்பிரயோகம் குறித்து நிற்கும் பண்புகளை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

02-

அறிவிப்பாளர்கள் அனைவரும் முழு அளவிலான நினைவாற்றல் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

03-

அறிவிப்பாளர் தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரையுள்ள எல்லா அறிவிப்பாளர்களும் கூறப்படல் வேண்டும்.

04-

முழு அளவிலான நினைவாற்றலும் "அத்ல் " எனும் சொற்பிரயோகம் குறித்து நிற்கும் பண்புகளை உடையவருமான ஓர் அறிவிப்பாளர்,அவரை விட தரத்தில் உயர்ந்த ஓர் அறிவிப்பாளருக்கு மத்னிலோ ஸனதிலோ முரண்படாத நிலையில் ஹதீஸ் இருத்தல் வேண்டும்.

05-

ஹதீஸின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் அமைந்த மறைமுகமான எந்த குறைபாடுகளும் ஸனதிலோ மத்னிலோ இருத்தல் ஆகாது.

இவை தொடர்பான விளக்கங்கள் கேள்வி இலக்கம் 79163 ல் முன்னர் கூறப்பட்டுள்ளன.

 இரண்டாவது :

நான்காவது மற்றும் ஐந்தாவது நிபந்தனைகள் மிகவும் துல்லியமானவை  மட்டுமல்ல திறனாய்வு செய்பவர்களுக்கு மிகவும் கடினமானவையும் கூட, ஏனெனில் இவற்றை நிறுவுவதற்கு அதிகத் தேடலும் நுணுக்கமும் ஹதீஸின் பல்வேறு வழிகள், அறிவிப்புக்கள் என்பவற்றை ஒன்று திரட்டவும் வேண்டும் என்பதோடு ஹதீஸ் கலையில் பரந்த அனுபவமும் திறனாய்வுத் துறையில் விசேட நிபுணத்துவமும் இருக்க வேண்டும்.

எனவேதான், பிற்கால ஹதீஸ் துறை அறிஞர்கள் பலர் ஹதீஸ்களுக்கான தமது தீர்ப்புக்களில் பேணுதலாக இருக்க வேண்டுமென்பதற்காக பின்வரும் முறையைக் கடைபிடித்துள்ளனர்.

ஸனதின் வெளிரங்கத்தை மாத்திரம் ஆய்வு செய்து அதில் முதல் மூன்று நிபந்தனைகளும் உள்ளதா என்று பார்த்து, அவைஅங்கு இருந்தால் அந்த ஸனத் ஸஹீஹ் என்று கூறுவார்கள்.

இதன் மூலம் நான்காவது மற்றும் ஐந்தாவது நிபந்தனைகள் இல்லாமல் முதல் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் தான் குறித்த ஹதீஸ் ஸஹீஹ் என்ற நிலையில் உள்ளது என்பதற்கு மாத்திரமே தாம் உத்தரவாதம் வழங்குவதாக வாசகர்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்கின்றனர்.  

இதனால் ஹதீஸ் துறை அறிஞர் என்ன கூற விரும்புகிறார் என்பதை வாசகருக்கு புரிந்துகொள்ள முடியும்.

ஹதீஸ் ஸஹீஹ் அல்லது ஹஸன் என்று குறிப்பிடாமல் ஸனத் ஸஹீஹ் அல்லது ஹஸன் என்று கூறுவது  ஸனத் ஸஹீஹான ஹதீஸைத்தான் குறிக்கும். ஹதீஸ் ஸஹீஹ் என்பதைக் குறிக்காது.  இங்கு குறித்த ஹதீஸில் இல்லத் அல்லது ஷாத் இடம்பெற்றிருப்பதுவே  இதற்கான காரணமாகும் என்று ஹாபிழ் இப்னுஸ் ஸலாஹ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்(முகத்திமா பீ உலூமில் ஹதீஸ் 23 )

ஸனத் ஸஹீஹ் அல்லது ஹஸன் என்று தீர்மானமாவதன் மூலம் ஹதீஸ்(மத்ன்) ஸஹீஹ் அல்லது ஹஸன் என்ற தீர்மானத்திற்கு வர முடியாது.  இங்கு குறித்த ஹதீஸில் இல்லத் அல்லது ஷாத் சிலவேளைகளில் இடம்பெறுவதுவே இதற்கான காரணமாகும் என்று இப்னு கதீர் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (இக்திஸார் உலூமில் ஹதீஸ் 43)

ஸனத் ஸஹீஹ் அல்லது ஹஸன் எனபது  ஹதீஸ்(மத்ன்) ஸஹீஹ் அல்லது ஹஸன் என்பதைக் குறிக்காது என்று அல்இராகி என்பவர் தனது நூலான அல்பியாவில் கூறுகிறார் (அத்தப்ஸிரா வத்தஸ்கிரா 1/107)

மூன்றாவது :

ஸனத் ஸஹீஹ்,ஹதீஸ் ஸஹீஹ் என்ற இந்த இரண்டு சொற்பிரயோகங்களுக்கிடையில் வேறுபடுத்தி விளக்கமளிக்கும் மரபினை பின்பற்றாத ஒருவர் ( குறிப்பாக, இவர் ஆரம்ப கால அறிஞராக இருத்தால் )ஸனத் ஸஹீஹ் என்று கூறுவது ஹதீஸ் ஸஹீஹ் என்பதைத்தான் குறிக்கும். மேற்குறித்த ஐந்து நிபந்தனைகளுக்கும் ஏற்பவே ஹதீஸ் ஸஹீஹ் என்று இங்கு தீர்மானிக்கப்படுகிறது.

இருப்பினும், அவர்களில் நம்பகமான நூலாசிரியர், ஹதீஸின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் எதுவும் கூறாமல் ஸனத் ஸஹீஹ் என்று மாத்திரம் குறிப்பிட்டால் அது ,வெளிப்படையாகஹதீஸ் ஸஹீஹ் என்பதைத்தான் குறிக்கும். ஏனெனில், அங்கு ஹதீஸின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் அமைந்த எந்த குறைபாடுகளும் இல்லையென்பதுவே அடிப்படையாகும்.அல்லாஹ்வே மிக அறிந்தவன். இந்த கருத்தினை ஹாபிழ் இப்னுஸ் ஸலாஹ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்( முகத்திமா பீ உலூமில் ஹதீஸ் 23 )

ஹதீஸ் ஸஹீஹ் என்று பொதுவாக வேறுபடுத்தாமல் சொல்பவர்களுக்கும்  ஹதீஸ் ஸஹீஹ் ஸனத் ஸஹீஹ் என்று வேறுபடுத்திக் வெவ்வேறாக் கூறுபவர்களுக்குமிடையில் வித்தியாசப்படுத்திப் பார்ப்பதுதான் சரியான அனுகுமுறையாக இருக்கும் என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

ஹதீஸ் ஸஹீஹ் ஸனத் ஸஹீஹ் என்று வேறுபடுத்திக் வெவ்வேறாக் கூறுபவரென ஒருவர் இனங்கானப்பட்டால் அவர் கூறுவதை அவ்வாறே வெவ்வேறாக புரிந்து கொள்ள வேண்டும். மேற்சொன்ன படி பிரித்து நோக்காமல் பொதுமைப்படுத்தி குறிப்பிடுபவராக இருந்தால் அதை அவ்வாறே புரிந்து கொள்ள வேண்டும் என்று ஏலவே நாம் நேரடியாகவே கூறிக்காட்டிய ஹாபிழ் இப்னுஸ் ஸலாஹ் அவர்களுடைய கூற்றினை மேற்கோள் காட்டி ஹாபிழ் இப்னு ஹஜர் (றஹ் )அவர்கள் கூறுகிறார்கள்.

(அந்நுகத் அலபினிஸ் ஸலாஹ் 1/474)

மூலநூட்கள்

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

எழுத்து வடிவமைப்பு விருப்பங்கள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android