சேமி
  • புதிய பட்டியல்
மேலும்
    சேமி
    • புதிய பட்டியல்
225/சபர்/1446 , 29/ஆகஸ்ட்/2024

இஹ்ராம் அணிந்த பின்னர்‌ தடை செய்யப்பட்ட விடயங்கள்.

கேள்வி: 11356

இஹ்ராம் அணிந்த பின்னர்‌ தடை செய்யப்பட்ட விடயங்கள் யாவை ?

Summary of answer

இஹ்ராம் அணிந்த பின் தவிர்ந்து நடக்க வேண்டிய அம்சங்களே, "இஹ்ராமில் தடை செய்யப்பட்டவை" என்று சொல்லப்படுகிறது.
விடயங்கள் பின்வருமாறு
தலை முடி வெட்டுதல், நறுமணம் பூசுதல், உடலுறவில் ஈடுபடுதல், உணர்வுடன் மனைவியோடு இன்பம் அனுபவித்தல், வேட்டைப் பிராணிகளை கொல்லுதல் போன்றன.
ஆண்களுக்கு மாத்திரம் தடைசெய்யப்பட்டவைகளாக தைத்த ஆடைகள், சட்டை, தோப், காற்சட்டை, தலைப்பாகை, காலுறை போன்றவற்றை அணிவதை குறிப்பிடலாம்.
பெண்களுக்கு மாத்திரம் தடைசெய்யப்பட்டதாக முகத்தை மறைக்கும் திரை (பேஸ் கவர்) அணிவதை குறிப்பிட முடியும்.
ஒருவர் மறதியாகவோ, அறியாமையின் காரணமாகவோ அல்லது நிர்ப்பந்தத்தின் பெயரில் செய்தால் அவருக்கு எந்தவொன்றும் அவசியமாகாது.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

இஹ்ராம் அணிந்த பின் தவிர்ந்து நடக்க வேண்டிய அம்சங்களே, இஹ்ராமில் தடை செய்யப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. அவை பின்வருமாறு..!

1- தலைமுடி நீக்குதல் ;

 ("அந்த ஹத்யு" - குர்பான் செய்யப்படும்-  இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்) (பகரா : 196)

தலைமுடி நீக்குவதன் சட்டத்துடன் உடலில் காணப்படும் ஏனைய முடிகளை நீக்குவதும் தடை என்பதை அறிஞர்கள் இணைத்துள்ளனர். மேலும் இத்துடன் நகங்களை வெட்டுவதையும் இணைத்தும் கூறியுள்ளனர்.

2- இஹ்ராம் அணிந்த பின்னர் நறுமணம் பூசுதல்.

அதாவது குளிக்கும் போது, உடை கழுவும் போது நறுமணம் பூசுவதை அல்லது நறுமணம் சேர்க்கப்பட்ட சவர்க்காரம்,சாம்பு, போன்ற விடயங்களை தவிர்க்க வேண்டும். மேலும் உணவு பதார்த்தங்களை சமைக்கும் போது நறுமணமூட்டிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பின்வரும் சம்பவம் இஹ்ராம் அணிந்த பின் நறுமணம் பூசுதல் தடை என்பதை பேசுகிறது.

ஹஜ்ஜதில் வதா வில் ஒட்டகம் மிதித்து இறந்த ஒருவரின் உடலை (நீர் மற்றும் இலந்தை இலைகளை கொண்டு குளிப்பாட்டுங்கள் இரண்டு ஆடைகளில் கபன் செய்யுங்கள் தலையை மறைக்காதீர்கள், நறுமணம் (ஹினூத்) பூசாதீர்கள்) என்று கூறினார்கள்‌.

3- உடலுறவில் ஈடுபடுதல்.

"(எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபடல், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது) (பகரா : 197)

4- மனைவியுடன் உணர்வுடன் கூடிய இன்பத்தை அனுபவித்தல்.

பொதுவாக வந்திருக்கும்(رفث) என்ற வார்த்தையில் அடங்குவதன் மூலம். அதாவது இஹ்ராம் அணிந்த ஒருவருக்கு திருமணம் மற்றும் அது சார்ந்த பேச்சுவார்த்தைகள் தடை எனும் பட்சத்தில் இவ்வாறான இன்பங்களை அனுபவிப்பதும் அனுமதிக்கப் படமாட்டாது.

5- வேட்டைப் பிராணியை கொள்ளுதல்.

( ஈமான் கொண்டவர்களே நீங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டை பிராணிகளை கொள்ள வேண்டாம்). (மாஇதா : 95)

 மரம் செடி கொடிகளை வெட்டுவது இஹ்ராம் அணிந்த ஒருவருக்கு தடை இல்லை. என்றாலும் ஹரத்தின் எல்லைக்குள் இருக்கும் போது அவர் இஹ்ராம் அணிந்து இருந்தாலும் அணியாவிட்டாலும் அவருக்கு தடை செய்யப்பட்ட காரியமாகும்.

அதனால் தான் அரபாவில் தங்கும் போது மரங்களை நீக்குவது அனுமதிக்கப்பட்ட விடயமாகும். மரங்களை நீக்குவது ஹரத்தோடு சம்மந்தப்பட்ட விடயம் இஹ்ராத்துடன் கிடையாது. 

6- ஆண்களுக்கு மாத்திரம் தடைசெய்யப்பட்டவை

தைத்த ஆடைகள் சட்டை தோப் டவ்ஸர் தலைப்பாகை காலுறை போன்றன அணிவது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இஹ்ராம் அணிந்த ஒருவர் (சட்டை, (முழுமையாக மறைக்கும் ஆடை) தோப், டவுசர், தலைப்பாகை, காலுறைகளை அணியாமல் இருக்கட்டும்)

 என்றாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், யார் வேட்டி இல்லாமல் இருக்கிறோ அவருக்கு சிர்வால் அணியவும் பாதணிகள் இல்லாதவருக்கு காலுறை அணியவும் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

 மேற்குறிப்பிட்ட ஐந்து ஆடைகளைப் பொருத்தவரை அறிஞர்கள், தைத்த ஆடைகள் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

பாமர மக்களில் சிலர் தைத்த ஆடை என்றால் ஆடையில் தையல் இருக்கும் எல்லா ஆடைகளும் என்று எண்ணுகின்றனர். விடயம் அவ்வாறல்ல. அதன் மூலம் அறிஞர்கள் நாட வருவது உடலை விட்டு பிரிந்து காணப்படும் ஆடைகளையாகும் அல்லது சில பகுதிகள் பிரிந்து காணப்படும் ஆடைகள் எனலாம். சட்டை மற்றும் சிர்வாலை போல. இதுவே அவர்களது திட்டமாகும்.

அந்த வகையில் இறுக்கமான போர்வை இறுக்கமான வேட்டி அணிந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. தையல் இன்றி நெய்யப்பட்ட சட்டையாக இருந்தாலும் அது தடை செய்யப்பட்டதுதான்.

7- பெண்களுக்கு மாத்திரம் தடைசெய்யப்பட்டவை

முகத்தை மறைக்கும் திரை ( ஃபேஸ் கவர்) அணிதல். அதாவது பெண் தன் முகத்தை முழுமையாக பார்ப்பதற்கு மாத்திரம் கண்களுக்கு துளை வைத்து  மறைக்கும் ஒரு திரை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை தடை செய்துள்ளார்கள். ஆக பெண்கள் இஹ்ராத்திற்கு பின்னர் முகத்திரையை அணிவது தடைசெய்யப்பட்ட அம்சமாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் முகத்தை திறப்பதுதான் வழிமுறை. அந்நிய ஆண்கள் அருகில் செல்லும் பட்சத்தில்  கைகளால் அத்திரையை முகத்தில் வைப்பது தவறேதும் இல்லை.

மறதி, அறியாமை மற்றும் நிர்ப்பந்தத்தின் பெயரில் தடை செய்யப்பட்ட அம்சங்களில் எதையாவது செய்துவிட்வரின் சட்டம்.

தடைசெய்யப்பட்ட அம்சங்களை ஒருவர் மறதியாகவோ அறியாமை காரணமாகவோ அல்லது நிர்ப்பந்தத்தின் பெயரில் செய்தால் அவருக்கு எந்தவொன்றும் அவசியமாகாது.

(முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.)

(அல்குர்ஆன் : 33:5)

வேட்டை பிராணியை கொள்வது தொடர்பாக ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது;)

(அல்குர்ஆன் : 5:95)

மேற்குறிப்பிட்ட வசனங்கள் அனைத்தும் மறதி, அறியாமை காரணமாக தடைசெய்யப்பட்ட அம்சங்களை  செய்தால் எந்த ஒன்றும் அவசியமில்லை என்று குறிப்பிடுகின்றன.

நிர்ப்பந்தத்தின் பெயரில் செய்வது தொடர்பாக

 (எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.)

 (அல்குர்ஆன் : 16:106)

குப்ரின் மீது நிர்பந்திப்பதே இவ்வாறு இருக்க இதை தாண்டி மற்ற எல்லா விடயங்களிலும் அவ்வாறுதான்.

மறதியில் இருப்பவன் நினைவுக்கு திரும்பினால் உடனடியாக தடை செய்யப்பட்டவை விட்டும் நீங்கி விட வேண்டும். அவ்வாறே நிர்ப்பந்தம் இல்லாமல் போய்விட்டாலும் நீங்கி விட வேண்டும்.

உதாரணமாக இஹ்ராம் அணிந்த ஒருவர் மறதில் தலையை மறைத்து விட்டு பின்பு ஞாபகம் வந்தால் துணியை தலையிலிருந்து எடுத்து விட வேண்டும். அதேபோல் கையை மனம் போட்டு கழுவும் போது ஞாபகம் வந்தால் அந்த மனம் நீங்கும் வரை நன்றாக கழுவ வேண்டும்.இப்படி நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

உசாத்துணை

ஷெய்க் இப்னு உதைமீன் ( ரஹ்) அவர்களின்

 பதாவா மனாரில் இஸ்லாம் (2/391-394)

மூலநூட்கள்

மூலம்

அஷ்ஷெய்க் இப்னு உஸைமீனின் மனாருல் இஸ்லாம் பத்வாக்கள் பாகம் 2 பக்கம் 391 முதல் 394 வரை

எழுத்து வடிவமைப்பு விருப்பங்கள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android